ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளமைக்கு அமைய, அவர்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவுள்ளதாக தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் விலகிக் கொண்டதன் காரணமாக தேசிய அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.