பொதுஜன முன்னணியுடன் இணையப் போவதில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தமது அணி எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணையாதென அண்மையில் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களைக் கொண்ட குழு தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா கருத்துத் தெரிவிக்கும் போது, எதிர்தரப்பில் அமர்ந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தில் சுதந்திரக் கட்சியின் அடையாளங்களை பாதுகாத்துக் கொண்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட தமது அணி தயாரெனத் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று மே மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர், கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறுமாயின், 16 பேருக்கும் அதிகமானவர்கள் புதிய நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்தரப்பில் அமர்வார்கள் எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.