தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் கட்சி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக சனநாயக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் நேற்று மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்ட நிலையில், இந்த கூட்டமைப்பானது நேற்றைய தினம் வவுனியா நகரசபையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமைக்கு அதிருப்தி தெரிவித்தே, கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக சனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.