வடிகாலமைப்பு தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேதன உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் 2 வாரங்களின் பின்னர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும், இந்த விடயத்தில் கடந்த காலங்களில் தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.