ஈரான் சபாநாயகர் இலங்கை வருகை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

தமது நாடாளுமன்றக் குழுவினருடன் இலங்கை வரும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர், சிரியாவின் சமகால நிலைவரம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

சிரியாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல், சர்வதேச பொறிமுறையை கருத்திற்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டது என்பது ஈரானின் கருத்தாகும். இது எதிர்காலத்தில் மோதல் நிலைமை ஒன்று தொடர்பில் தாக்கம் செலுத்தக் கூடும் என்பதால், வியட்நாம் மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கவனம் செலுத்துவாரென ஈரான் பெஹர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

குறித்த நாடுகளில் பேசப்படும் விடயங்கள், சர்வதேச ரீதியில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முக்கியத்துவமிக்கதாகும் என்பது ஈரானின் கருத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.