யாழ். மேயர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை இன்று (18) சந்தித்து கலந்துரையாடினார்.

ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, யாழ். மாநகரத்தை அழகுபடுத்துவதுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதுக்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதுக்கு தயாராக இருப்பதாகவும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கோரிக்கையை முன்வைக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.