ஜே.வி.பியிடம் வாக்குறுதி வழங்கிய முன்னாள் ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படுமாயின், அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பியிடம் கூறியதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளையில் உள்ள வஜிராராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, நல்லாட்சி அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலின் பின்னரான புதிய நாடாளுமன்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான திருத்தச் சட்டமூலத்தை, கொண்டுவந்தால் அதற்கு ஆதரவளித்து, ஆதரவாக வாக்களிப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் மஹிந்த உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, நல்லாட்சி அரசாங்கம், ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் நாட்டு வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருவதாகவும் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.