பிரத்தியேக வகுப்புகளுக்கு பலவந்தமாக அழைக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரத்தியேக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களை பலவந்தமாக அழைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்காகக் கொண்டு நடத்தப்படும் பிரத்தியேக வகுப்புகளுக்கு மாணவர்களை வரவைப்பதற்காக பல ஆசிரியர்கள் அழுத்தங்களை பிரயோகிப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதால், கல்வி அமைச்சில் அமைக்கப்பட்டுள்ள 1988 என்ற அலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொண்டு இதுதொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் எனவும், கிடைக்கபெறும் முறைப்பாடுகளுக்கு அமைய உடனடி ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.