மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படும் என்ற இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பில் கட்சித் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஒன்று கூடி ஆராயவுள்ள அதேவேளை, கண்டி மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விஷேட கட்சித் தலைவர் கூட்டம் ஒன்று சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.