தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தத் தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

1980ஆம் ஆண்டு 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கழிவு பொருட்கள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் நபர்களுக்கு எதிராக அபராதம் அறிவிடுவதற்கான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் சட்டத்தில் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லையென மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சந்திரரட்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

கழிவகற்றல் செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளாமைக்கு காரணமாக சூழல் மாசடைதல் அதிகமாக தற்போது இடம்பெற்று வருவதாகவும், ஆறுகளுடன் தொடர்புடைய நீர்ப்பாசன திட்டத்தில் கழிவுநீரை கலக்கவிடுகின்றமை தொடர்பிலும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் சட்டத்தை திருத்தத்திற்குட்படுத்தும் போது இவ்வாறான அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சந்திரரட்ன பல்லேகம சுட்டிக்காட்டியுள்ளார்.