ஆலய உண்டியல் உடைத்துத் திருட்டு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வயாவிளான் குட்டியப்புலம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைப் பணம் திருட்டுப் போயுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றிருக்கக் கூடுமெனச் சந்தேகிக்கப்படும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னரும்கூட அபிராமி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போயிருந்தமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென ஆலய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.