சீனாவே இலங்கையை வழிநடத்துகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தற்போதைய இலங்கையை சீனாவே வழிநடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மல்வத்தை, அஸ்கிரிய மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு இதனை அவர் தெரிவித்ததுடன், நாட்டில் எந்த கட்சிக்கும் நிலையான கொள்கையில்லை எனவும், தனியாட்சி மேற்கொள்வதா என்று ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், புதிய அமைச்சரவையில் எவ்வாறான மாற்றங்கள் வரும் என்று ஜனாதிபதி இன்னும் முடிவு செய்யாத நிலையில், இலங்கையில் தமது அதிகாரத்தை சீனா செலுத்தி இலங்கையை வழிநடத்துகின்றது எனவும் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.