அகதிகள் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் அனுமதி

உலகச் செய்திகள்

சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் தேசிய சபை அனுமதியளித்துள்ளது.

இதன்பொருட்டு நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் சட்டமூலத்திற்கு ஆதரவாக 228 வாக்குகளும் எதிராக 139 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. பிரான்ஸிற்கு வருபவர்கள் அகதி அந்தஸ்தை பெற்றுக்கொள்வதன் பொருட்டு வழங்கப்பட்டிருந்த காலம் இந்த சட்டமூலத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் சட்டவிரோதமாக பிரான்ஸ{க்குள் உள்நுழையும் அகதிகளைக் கைது செய்து தடுத்துவைக்கும் காலமும் இரண்டு மடங்காக அதிகாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இந்த புதிய சட்டமூலத்திற்கு பிரான்ஸ் மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.