டொரோன்டோவில் விபத்து – 10 பேர் பலி

உலகச் செய்திகள் செய்திகள்

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்ததுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •