வவுச்சர் முறை தொடரும்

செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகுமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஐப்பான் எக்ஸ்போ 2018 என்ற சமூக கலாசார கண்காட்சியில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் பெறுமதியை அதிகரிப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது. புத்தக விநியோகத்தில் தரம் 10, தரம் 11 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறு கல்வியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வருடாந்தம் சராசரியாக 10,000 ஆசிரியைகள் பேறுகால விடுமுறைகள் உள்ளிட்ட விடுப்புக்களில் செல்கிறார்கள். இந்த சமயத்தில் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கல்வி வலய மட்டங்களில் ஆசிரியர் குழாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •