அலங்கார மீன் ஏற்றுமதி வேலைத்திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கையில் அலங்கார மீன் ஏற்றுமதி மற்றும் உள்ளுர் வர்த்தகத்திற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி துறையை கூடுதலான வருமானத்தை பெறக்கூடிய அலங்கார மீன் தொழில்துறைக்கு சர்வதேச தரத்தை அறிமுகப்படுத்தல், தேவையான தொழில்நுட்பம், நிதி வசதிகளை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம். இதனூடாக தேசிய வர்த்தகம் மேம்படும் என்றும் எதிர்பார்ப்பதாக அலங்கார மீன் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்தத் தொழில்துறையில் ஏழு மாகாணங்களில் சுமார் 250 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொகையை 500 ஆக அதிகரிப்பது நோக்கம் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அலங்கார மீன் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •