இலங்கையிடம் சீனா வலியுறுத்திய விடயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை சீர்குலைக்க சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில், இலங்கை அவதானமாக இருக்க வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் இலங்கைக்கான தூதுவர் செங் சியுஆன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இராணுவ தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க ஆகியோருடனான பிரத்தியேக சந்திப்புகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக சீனா இராணுவ செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாக உண்மைக்குப்புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இவ்வாறான தகவல்கள் இலங்கை – சீன உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக பரப்பப்படுவன என்றும், இவை தொடர்பில் இலங்கை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.