பொருத்தமானவர்களுக்கே அமைச்சுப் பதவி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பொருத்தமானவர்களுக்கு மாத்திரமே அமைச்சர் பதவி வழங்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சுக்களுக்கான அமைச்சர் பதவிகளுக்காக தகுதியுடையவர்களை மாத்திரமே நியமிக்கவுள்ளதாகவும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையளிக்கும் வகையிலும், மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts