நிறைவேற்று அதிகார முறைமை நீக்கத்திற்கு எதிர்ப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் பிரதமருக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்பதால், இதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் யோசனைக்கு ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட முடியாது எனவும், அவ்வாறு செயற்பட்டால் தனியொரு அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு செல்லும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •