போலிக் கையொப்பமிட்டு சம்பளம் பெற்றார் வலயக் கல்விப் பணிப்பாளர்?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

விடுமுறை தினங்களிலும் சேவைக்கு வந்ததாக போலியாக கையொப்பமிட்டு சம்பளம் பெற்றுக் கொண்ட நிகவரெட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் விசாரணை செய்யுமாறு அந்த அலுவலகத்தின் பணியாளர்கள் வடமேல் பிரதான செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நிகவரெட்டிய வலயக் கல்விக்க காரியாலயத்தில் சேவையாற்றும் நிர்வாக அதிகாரி எம்.ஜீ. விமலசேனவின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர், விடுமுறை தினங்களிலும் சேவைக்கு வந்திருப்பதாக வேறு ஒருவரின் மூலம் கைவிரல் அடையாள இயந்திரத்தில் வரவு பதியப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளரின் கைவிரல் அடையாளத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் கைவிரல் அடையாளம் அந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி முதல் அந்த இயந்தியரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இடம்பெற்ற இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யுமாறு வலயக் கல்விக் காரியாலய மேலதிகாரிகளிடம் அலுவலக பணியாளர்கள் கேட்டுக் கொண்ட போதிலும், அதற்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லையென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Posts