இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு புதிய வாரிசு (Photos)

உலகச் செய்திகள் செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதிக்கு 3ஆவது குழந்தை பிறந்துள்ளது.

பிரிட்டன் நேரப்படி நேற்றுக் காலை 11.01 மணிக்கு கேட் மிடில்டனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து இன்று வெளியே வந்த இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியரைக் காண நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் ஜோர்ஜ் மற்றும் 3 வயதில் சார்லட் ஆகிய 2 குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •