அரசு வீழ்ச்சியடைந்துள்ளது – ஜே.வி.பி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பொருளாதார ரீதியில் எவ்வித வெற்றியையும் அடையாத மற்றும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள அரசாக இந்த அரசாங்கம் ஆட்சியாளர்களினால் ஆக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்ததாகவும், ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியமைத்ததாகவும், இவ்வாறு 70 வருடங்கள் ஆட்சி செய்தும் நாட்டில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய வலயத்திலேயே அதிக வறுமையில் வாழும் மக்கள் உள்ள அரசாக இந்த அரசாங்கம் ஆகிவிட்டதாகவும் அனுரகுமார திஸநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.