பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் – வைபர் தகவல் தொடர்பாடல் செயலி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வைபர் தகவல் தொடர்பாடல் செயலி இலங்கைக்கு உறுதிமொழி வழங்கியுள்ளது.

இணையத்தில் பல்வேறு தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள் கசிவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வைபர் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது. இலங்கையில் 8 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வைபர் செயலியை பயன்படுத்தி வருகின்ற நிலையில், வைபர் ஸ்டிக்கர்களை 100 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அனுப்புவதும் பெறுவதுமாக இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.