கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மேர்வின் கேள்வி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடும் அளவுக்கு தற்போதைய அரசாங்கம் ஏதேனும் செய்திருக்கின்றதா என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளதுடன், நாட்டில் தற்போது மரண பயமும் இல்லை, எவரும் அச்சப்படாமல் தமது கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமும் நாட்டில் உள்ளதுடன், இப்போது ஜனாதிபதி, பிரதமர் முதல் எவரையும் விமர்சிக்கக் கூடிய சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.