வைத்தியரைத் தாக்கியவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில், நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தாய்க்கு முறையாக சிகிச்சையளிக்கப்படவில்லையெனத் தெரிவித்தே, குறித்த நபர் மருத்துவரை தாக்கியுள்ளதாகப் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மருத்துவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.