பிரதி சபாநாயகர் தொடர்பில் அறிவிக்க முடியாத நிலையில் சபாநாயகர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இதுவரையிலும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆகையால், பிரதி சபாநாயகர் தொடர்பில் என்னால் எதனையும் அறிவிக்க முடியாது என்றார்.

பிரதி சபாநாயகராகக் கடமையாற்றிய, திலங்க சுமதிபால, அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தைத் தன்னிடம் கையளித்துள்ளார் என்றும், ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்காத பட்சத்தில், பிரதி சபாநாயகர் தொடர்பில் தன்னால் எதனையும் அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.