இரணைத்தீவு மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

சிறப்புச் செய்திகள் செய்திகள்

இரணைத்தீவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த மக்களின் காணிகள், கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில், அதனை மீட்டுத்தருமாறு கோரி ஒரு வருடத்துக்கு மேலாக போராட்டம் நடத்திய மக்கள், தற்போது இரணைத்தீவில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.

இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கயந்த கருணாதிலக, அரசாங்கம் இரணைத்தீவு விடயத்தில் அவதானம் செலுத்தி இருப்பதாகவும், அந்த மக்களுக்கான தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.