லொறியிலிருந்து தவறி விழுந்த 11 மாணவர்கள்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஹுனுமுல்ல பாடசாலையொன்றில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு லொறி ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 11 பாடசாலை மாணவர்கள் கெலபிட்டிமுல்ல பிரதேசத்தில் லொறியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த 7 மாணவர்கள் திவுலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை முடிந்து வீடு செல்வதற்காக லொறியில் ஏறிய மாணவர்கள் லொறி வளைவில் திரும்பிய வேளை தவறி விழுந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.