திருமலையில் 15 மீனவர்கள் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை கடற்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா மற்றும் ஜமாலியா பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட குறித்த கடற்றொழிலாளர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த கடற்றொழிலாளர்களிடம் இருந்த படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Trending Posts