சுன்னாகம் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம்,ஜன 24

சுன்னாகத்தில் சினிமா பாணியில் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய  தகவல்கள் தெரிவிக்கின்றன.

29 வயதுடைய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவருக்கு உடம்பில் காயங்கள் காணப்படுவதனால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்