யுத்த பாதிப்புக்குள்ளான யாழ். குடும்பங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, எந்தவித வாழ்வாதார உதவிகளும் இல்லாதிருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு மரமுந்திரி பயிர்ச் செய்கைக்காக அமெரிக்கா நிதியுதவி வழங்கவுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியின் மருதங்கேணி பிரதேசத்தின் அம்பன் கிராமம் இதன்பொருட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் ஊடாக ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகை பயிரிட எதிர்பார்க்கப்படுவதாகவும், இதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் 2.9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.