புதிய நியமனங்களுக்கு பாராளுமன்றம் அனுமதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர், தூதுவர் ஒருவர், அமைச்சின் செயலாளர் ஒருவர் மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் இருவரை நியமிக்க உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழு குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய அவுஸ்ரேலியா நாட்டுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகராக சித்ராங்கனி வாகிஸ்வரவை நியமிப்பதற்கும், இஸ்ரேல் நாட்டுக்கான புதிய தூதுவராக எம்.எச்.எம்.என்.பண்டாரவை நியமிப்பதற்கும் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஆத்து அத்துடன் விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளராக குணதாச அமரசிங்கவையும்,வீதி அதிகார சபையின் புதிய தலைவராக சி.பி.அதுகோரல,மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக என்.கே.நாரகல ஆகியோரை நியமிக்க உயர்பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.