வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பை உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

உலகச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறும் என்பதை உறுதிசெய்துள்ளார்.

அந்தச் சந்திப்பு, அடுத்த ஜூன் மாதம் 12ஆம் திகதி இடம்பெறுமென தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதுடன், உலக அமைதிக்கான மிகச் சிறந்த தருணமாக அதனை உருவாக்கத் தாங்கள் இருவரும் முயற்சி மேற்கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.