இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலையேற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

புதிய விலைச் சூத்திரத்திற்கமைவாக எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றமடையலாமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்ததுடன், இந்த விலை மாற்றமானது உலக சந்தை விலைக்கமைய அதிகரிக்கும் அல்லது குறையும் என்றும் தெரிவித்தார்.

புதிய விலைச் சூத்திரத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும், இந்த புதிய விலைச் சூத்திரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts