பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் யோசனை முன்வைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதையொட்டி, பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனையொன்று, நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில், இன்றைய தினமும் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும், எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமெனவும் அவ்வாறு தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், எதிர்வரும் 17ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.