தென்னை மரம் வெட்டத் தடை?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தென்னை மரங்கள் வெட்டப்படுவதைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, தென்னை மரங்களை வெட்டுவதற்கான அனுமதிப் பத்திரம் பெறுவதைக் கட்டாயமாக்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான யோசனையானது எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், தேங்காய் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.