இன்னமும் தீர்மானமில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்த எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலிஎலயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவில் முன்னிலையாகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு தாங்கள் ஆதரவு வழங்குவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Trending Posts