மக்கள் சேவையின் ஊடாகவே சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க முடியும்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், தேசிய அரசாங்கத்தை நீடித்து மக்களுக்கு சேவை வழங்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமென பலர் வலியுறுத்துவதனால் அரசாங்கத்தைவிட்டு விலகி வெளியில் இருந்து கட்சியை பாதுகாக்க முடியாது எனவும், மக்களுக்கு சேவையாற்றுவதன் ஊடகாவே சுதந்திர கட்சியை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.