90 யானைகள் உயிரிழப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 90 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர் யூ.எல். தௌபிக் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது அதிகம் எனவும், நாட்டு வெடி காரணமாக அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு காரணமாக 16 யானைகளும், மின்சார வேலி காரணமாக 10 யானைகளும், யானை மனித மோதல்கள் காரணமாக இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் ஹெரவபொத்தானை வனவிலங்கு வலயத்திற்குள் 6 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாகவும் வனவிலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.