பஸ் கட்டண அதிகரிப்புத் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது குறித்த அமைச்சரவை பத்திரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நிபுணத்துவ குழுவினர் நேற்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பஸ் கட்டணத்தை அதிகரிப்பது குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்து அதனை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்க அந்த நிபுணத்துவ குழு தீர்மானித்துள்ளமைக்கு அமைவாக, இன்று அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

10 வீத கட்டண அதிகாரிப்பை எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.