விரைவில் விசாரணை அறிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கண்டியில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்போது 100ற்கும் அதிகமான சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய முடிந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களிடமும் பிரதேச மக்களிடமும் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக கண்டி பிரதேசத்தில் அரச அதிகாரிகளிடமும் எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பெற்றுக் கொள்ளப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் விரைவாக அறிக்கை தயாரித்து அதனை வெளியிடுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாராவது ஒரு தரப்பினரின் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்குமானால் அதனுடன் தொடர்புபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தமாக வெளிப்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Trending Posts