வவுனியா சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் இன்று சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் போதைவஸ்து பாவனைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, வவுனியா சிறைச்சாலைக்குள் போதைவஸ்து பாவனை இருப்பதாகவும் சட்டவிரோதமாக சிறைச்சாலைக்குள் போதைவஸ்து வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை நேற்று சிறைக் காவலர்கள் தாக்கியமையால் அக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதன் தொடர்ச்சியாக சிறைக் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று சிறைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.