விவசாய நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

விவசாய அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் 03 நிறுவனங்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவால் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, உணவு ஊக்குவிப்பு சபையின் தலைவராக மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கடமையாற்றிய சட்டத்தரணி உபாலி மொஹட்டிய் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனத்தின் தலைவரான அமைச்சின் முன்னாள் செயலாளரான அமரநாத் அபேகுணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கொமர்ஸல் உர நிறுவனத்தின் தலைவராக ஜகத் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் இதற்கு முன்னர் இலங்கை மீன்பிடி கூட்டுதாபனம் மற்றும் சீனோர் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.