இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக இனோக்கா சத்யாங்கனி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் தலைவராக, திலக ஜயசுந்தரவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக மொஹமட் சித்திக் பாருக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்து, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.