இரணைதீவிற்கு உயர்மட்டக்குழு வருகை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இரணைதீவிற்கு ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் மீள்குடியேற்ற அமைச்சின் உதவிச் செயலாளர் வட பிராந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

இக்குழுவின் மீள்குடியேற்ற அமைச்சின் உதவி செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஷ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், வடபிராந்திய கடற்படை தளபதி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேச செயலர் கிருஷ்நேந்திரன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் ஆகியோருடன் பங்குத்தந்தையும் உடனிருந்தனர்.

வருகை தந்த குழுவினரை இரணைதீவு மக்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.