ஆற்றில் அள்ளுண்டுவந்த மூதாட்டி மீட்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஆற்றில் அள்ளுண்டு வந்த மூதாட்டி ஒருவரை வனராஜா தோட்டபகுதி மக்களின் உதவி மூலம் உயிருடன் மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூதாட்டியை டிக்கோயா வனராஜா ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மீட்டுள்ளதாகவும், குறித்த மூதாட்டி தொடர்பில் இதுவரையில் எவ்வித அடையாளங்களும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.