அதிர்ச்சித் தோல்வியில் ஷரபோவா

விளையாட்டு

மகளிருக்கான கட்டார் பகிரங்க டெனிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதற்சுற்றுக்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்விடைந்துள்ளார்.

டோஹா நகரில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக டெனிஸ் தரவரிசையில் 92ஆவது இடத்திலிருந்த மோனிகாவை 41ஆவது இடத்திலிருந்த ஷரபோவா எதிர்கொண்டார். அந்தவகையில் 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ஷரபோவா தோல்வியடைந்து கட்டார் பகிரங்க டெனிஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதுவரை 5 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த அவருக்கு ஊக்கமருந்து பாவித்தமைக்காக விளையாடுவதற்குத் சிலகாலம் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க போட்டியில் விளையாடிய நிலையில், அந்தப் போட்டியில் இரண்டாம் சுற்றுடன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.