வைத்தியர்கள் போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 8.00 மணி முதல் பரந்தளவிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்ததை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். தமது கோரிக்கைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை வழங்காவிட்டால் எதிரில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.