15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்!

முக்கிய செய்திகள் 1

மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர், மீனவ மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுந்தேகம பிரதேசத்தில் உள்ள நல்லச்சிய நீர்த்தேக்கத்திலிருந்து நீரினை எடுத்துச் செல்லும் கால்வாயில் சைக்கிளில் பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மினிமுதுகம, களுந்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.