இலவச சட்ட ஆலோசனைக்கு ஏற்பாடு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தேசிய சட்ட வாரத்தில் பொது மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளதுடன், சட்ட ஆலோசனைகளை பெற விரும்புவோர், 0777235363 என்ற இலக்கத்திற்கு அழைத்தும் எழுத்து மூலமும் ஆலோனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

எழுத்துமூல ஆவணங்களை தலைவர், சட்டத்தரணிகள் சங்கம், சட்ட வாரம் கொழும்பு 12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய சட்ட வாரம், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஒரு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தககது.